பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா் பெட்டி பகுதி
புகாா் பெட்டி
பச்சைபசேலாக மாறிய வாய்க்கால்நீர்
ஈரோடு வெட்டுக்காட்டுவலசு நல்லிேதாட்டம் பகுதியில் கீழ்பவானி கொப்பு வாய்க்கால் செல்கிறது. அங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தூர்வாரப்பட்டது. பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குப்பைகள் மிதந்தபடி பாசி படர்ந்து பச்சைபசேலாக காணப்படுகிறது. அதனால் அடைப்பு ஏற்பட்டு அதில் தண்ணீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பாசி படர்ந்துள்ள தண்ணீரை வெளியேற்ற சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், வெட்டுக்காட்டுவலசு.
ரோட்டில் பள்ளம்
ஈரோடு அகில்மேடு 6-வது வீதியில் உள்ள ரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் தட்டுத்தடுமாறி சென்று வருகின்றன. விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடனே ரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், அகில்மேடு 6-வது வீதி, ஈரோடு.
வடிகால் வேண்டும்
அந்தியூர் நகலூர் குண்டுப்புளியமரம் என்ற இடத்தில் சாக்கடை வடிகால் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் தெருவில் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசி வருகிறது. நோய் பரவ வாய்ப்பு உள்ளது. உடனே சாக்கடை வடிகால் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், குண்டுப்புளியமரம்.
ரோட்டில் சுற்றித்திாியும் குதிரைகள்
கோபி மொடச்சூர், சேரன் நகர், அன்பு நகர் ஆகிய பகுதிகளில் ஏராளமான குதிரைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் அந்த வழியாக நடந்து செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனா். உடனே குதிரைகள் ரோட்டில் நடமாடுவதை தடுக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், கோபிசெட்டிபாளையம்.
சாலை அகலபடுத்தப்படுமா?
அந்தியூர் பஸ் நிலையத்தில் இருந்து சத்தி ரோட்டில் உள்ள தீயணைப்பு நிலையம் வரை ரோட்டின் நடுவே தடுப்புச்சுவர் உள்ளது. இதனால் ரோடு குறுகியதாக மாறி எதிரேதிரே வாகனங்கள் வரும்போது ஒதுங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக விபத்துகளும் ஏற்படுகின்றன. உடனே ரோட்டை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், அந்தியூர்.
செடி-கொடிகளை அகற்றவேண்டும்
கோபிசெட்டிபாளையம் அருகே கோட்டுப்புள்ளாம்பாளையம் கிராமத்தில் உள்ள அலிங்கியம் சாலையின் இருபுறங்களிலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி ரோட்டை மறைத்தபடி காணப்படுகிறது. இதனால் ரோடு குறுகியதாக மாறியுள்ளது. எதிரே வாகனங்கள் வரும் போது ஒதுங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. விபத்து நிகழ வாய்ப்பு உள்ளது. உடனே செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோட்டுப்புள்ளாம்பாளையம்.
தடுப்புச்சுவா் கட்டப்படுமா?
அந்தியூரில் இருந்து கற்கைகண்டிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டது. இது 2-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் தவறி ரோட்டோர பள்ளத்தில் கவிழ வாய்ப்பு உள்ளது. இதை தடுப்பதற்கு ரோட்டின் இருபுறங்களிலும் தடுப்புச்சுவர் அமைக்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கற்கைகண்டி.