திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.

Update: 2023-03-31 19:27 GMT

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூரில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 26-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் அம்மனுக்கு பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மேலும் அம்மன் வீதி உலாவும், இரவில் அரிச்சந்திரா நாடகமும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை தீமிதி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக இறங்கி நடந்து சென்று அம்மனை வழிபட்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஒரு சிலர் தங்களது குழந்தைகளை தோளில் சுமந்தபடி தீ மிதித்தனர். அப்போது அருகில் இருந்த பக்தர்கள் அனைவரும் பக்தி கோஷங்களை எழுப்பினர். விழாவில் தா.பழூர் மற்றும் சுற்று வட்டாரங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்