பகவதியம்மன் கோவிலில் தீமிதி விழா
கு.அய்யம்பாளையத்தில் பகவதியம்மன் கோவிலில் தீமிதி விழா நடைபெற்றது.
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே உள்ள கு.அய்யம்பாளையத்தில் பகவதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 30-ந் தேதி பூச்சாட்டுதலிடன் தொடங்கியது. இதயைடுத்து கடந்த 2-ந் தேதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், வடிசோறு நிகழ்ச்சியும் நடைபெற்றது. 3-ந் தேதி பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து வாண வேடிக்கை நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை மாவிளக்கு பூஜையும், அதனை தொடர்ந்து மஞ்சள் நீராட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கு.அய்யம்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கு.அய்யம்பாளையம் பகவதியம்மன் கோவில் திருவிழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.