கிருஷ்ணகிரியில் தொழிலாளி மர்மசாவு போலீசார் விசாரணை

Update: 2022-12-08 18:45 GMT

கிருஷ்ணகிரியில் தொழிலாளி மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலாளி

கிருஷ்ணகிரி வேட்டியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் திருப்பதி. இவருடைய மகன் ராஜேஷ் (வயது 23). தொழிலாளி. இவர் கிருஷ்ணகிரியில் உள்ள திருவண்ணாமலை சாலையில் பசும்பொன் நேதாஜி நகர் பகுதியில் வசித்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி இரவு ராஜேஷ் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது. இதையடுத்து அவருக்கும், பெற்றோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். பின்னர் ராஜேஷ் வீட்டின் வெளியே படுத்து தூங்கினார். இதனை தொடர்ந்து 7-ந் தேதி காலை ராஜேஷ் வீட்டில் வெளியே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவருடைய தந்தை திருப்பதி கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார்.

சந்தேக மரணம்

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்