மொரப்பூர்:
மொரப்பூர் அருகே மரப்பலகை அறுக்கும் எந்திரம் கால்களை அறுத்ததில் தொழிலாளி இறந்தார்.
கட்டிட தொழிலாளி
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள சுண்டக்காப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தென்னரசு (வயது 37). கட்டிட தொழிலாளி. இவர் சம்பவத்தன்று எம்.வெளாம்பட்டி கிராமத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டார். அப்போது மரப்பலகையை எந்திரத்தை கொண்டு அறுத்தார். அந்தசமயம் எந்திரம் தவறி தென்னரசுவின் கால்களில் 2 தொடைகளையும் அறுத்து விட்டது. இதில் பலத்த காயமடைந்த தென்னரசுவை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு அரூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தனர்.
விசாரணை
பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தென்னரசு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வான்மதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.