காயம் அடைந்தவர்களுக்கு தர்மர் எம்.பி. நிதியுதவி

திருச்சி மாநாட்டுக்கு சென்ற வாகனம் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தர்மர் எம்.பி. நிதியுதவி வழங்கினார்.

Update: 2023-04-28 18:45 GMT

முதுகுளத்தூர்,

திருச்சியில் கடந்த 24-ந்தேதி ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில் முதுகுளத்தூர் அருகே உள்ள ஆதம் கொத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மாநாட்டிற்கு சென்று திரும்பியபோது முதுகுளத்தூர் அருகே எதிர்பாராத விதமாக வேன் விபத்துக்குள்ளானது. இதில் 16 பேர் காயம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து எம்.பி. தர்மர் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தகவல் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் காயம் அடைந்தவர்களுக்கு நிதி உதவி வழங்க அவர் உத்தரவிட்டார். அதன் பேரில் அ.தி.மு.க. மாநிலங்களவை எம்.பி. தர்மர் காயம் அடைந்த 16 பேரின் இல்லத்திற்கு நேரில் சென்று நிதி உதவி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் .அணியை சேர்ந்த முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் முத்துசாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் கருப்பசாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் சேதுராமன், நகரச் செயலாளர் முருகேசன், ஆதம் கொத்தங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கதிரேசன், கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் முருகானந்தம், நிலவள வங்கி தலைவர் தட்டனேந்தல் ராமச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி கொசுக்குடி ராஜேஷ், பூக்குளம் பழனி, டிரைவர் சிம்பு உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்