தர்மபுரி மின் திட்ட தொழிலாளர்கள் கடன் சங்கத்தின் சட்டப்பூர்வ நிதி ஒப்படைக்கும் நிகழ்ச்சி
தர்மபுரி மின் திட்ட தொழிலாளர்கள் கடன் சங்கத்தின் சட்டப்பூர்வ நிதி ஒப்படைக்கும் நிகழ்ச்சி
தர்மபுரி மின் திட்ட தொழிலாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத்தின் சட்டப்பூர்வ நிதி ஒப்படைக்கும் நிகழ்ச்சி தர்மபுரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ராமதாசிடம் சங்கத்தலைவர் சின்னசாமி சட்டப்பூர்வ நிதி ரூ.5 லட்சத்து 72 ஆயிரத்து 736-க்கான காசோலையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவரும், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனருமான பொன்னுவேல், தர்மபுரி மின் திட்ட பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்க தலைவர் சண்முகம், செயலாளர்கள் அம்மாசி, கந்தன் கூட்டுறவு ஒன்றிய பிரசார அலுவலர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.