நரசிம்மர் கோவிலில் லட்சக்கணக்கான தேங்காய்களை உடைத்து பக்தர்கள் வழிபாடு
ஆரணியில் மகாளய அமாவாசையையொட்டி நரசிம்மர் கோவிலில் லட்சக்கணக்கான தேங்காய்களை உடைத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
ஆரணி
ஆரணியில் மகாளய அமாவாசையையொட்டி நரசிம்மர் கோவிலில் லட்சக்கணக்கான தேங்காய்களை உடைத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
ஆரணி சைதாப்பேட்டை நாடக சாலை பேட்டை தெருவில் அமிர்தவல்லி சமேத நரசிம்மர் கோவில் உள்ளது. இங்கு மகாளய அமாவாசை தினத்தையொட்டி சிறப்பு அபிஷேகமும், யாக பூஜைகளும் நடந்தது. தொடர்ந்து நரசிம்மர் சிரசுவுக்கு வி.ஏ.கே.நகர் பகுதியில் உள்ள காளி கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட நூதன புஷ்ப பல்லக்கில் நரசிம்மர் சிரசுவை வைத்து அப்பகுதியில் உள்ள மாடவீதிகளின் வழியாக மங்கள வாத்தியங்களுடன் திருவீதி உலா இரவு தொடங்கி அதிகாலை வரை நடைபெற்றது.
விழாவின்போது பக்தர்கள் லட்சக்கணக்கான தேங்காய்களை உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். விழாவில் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி, துணைத் தலைவர் பாரி பி.பாபு மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனையொட்டி காலை முதல் இரவு வரை அன்னதானமும் நடைபெற்றது.