பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்ததால் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Update: 2022-08-14 16:26 GMT

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் இடும்பன்குளம், சண்முகநதியில் நீராடி பழனி கோவிலுக்கு சென்று வழிபடுகின்றனர். வார விடுமுறை, தொடர் விடுமுறை, மாத கிருத்திகை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

குறிப்பாக வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமையில் வெளியூர் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். அந்தவகையில் தொடர் விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.

அதிகாலை முதலே பக்தர்கள் திரண்டதால் அடிவாரம், பாதவிநாயகர் கோவில், படிப்பாதை ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். இந்நிலையில் பழனி அடிவாரம், கிரிவீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்