பக்தர்கள் பால்குட ஊர்வலம்
நாகை மறைமலைநகர் கருமாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குட ஊர்வலம் நடந்தது.
வெளிப்பாளையம்:
நாகை காடம்பாடி மறைமலைநகரில் கருமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத திருவிழா கடந்த 22-ந் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து காப்புகட்டுதல், பூச்சொரிதல், சக்திகரகம் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இதை தொடர்ந்து நேற்று பால்குடகாவடி, அலகு காவடி விழா நடந்தது. முன்னதாக. நம்பியார் நகர் செல்லும் வழியில் உள்ள முனீஸ்வரர் கோவிலில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலை அடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.