நீடாமங்கலம் வட்டாரத்தில் வளர்ச்சி பணிகள்

நீடாமங்கலம் வட்டாரத்தில் வளர்ச்சி பணிகள்

Update: 2023-06-07 18:45 GMT

நீடாமங்கலம் வட்டாரத்தில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் சாருஸ்ரீ நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வளர்ச்சி பணிகள்

நீடாமங்கலம் வட்டாரத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.70.79 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 4 வகுப்பறை கட்டிடம், பூவனூர் ஊராட்சி தட்டி கொத்தமங்கலம் இடையே கோரையாற்றின் குறுக்கே ரூ.276.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பாலம் கட்டுமானப்பணி ஆகியவற்றை கலெக்டர் சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அறிவுரை

அப்போது பணியின் தரம் குறித்த விவரங்களை பொறியாளர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் பணிகளை உரிய காலத்தில் நல்ல முறையில் செய்து முடிக்க அறிவுரை வழங்கினார். தொடர்ந்து ராயபுரம், கீழப்பட்டு, புள்ளவராயன் குடிகாடு, எடமேலையூர் மேற்கு, எடமேலையூர் நடுத்தெரு ஆகிய பகுதிகளில் ரூ.99.56 லட்சம் செலவில் நடந்து வரும் பல்வேறு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது ஒன்றியக்குழு தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன், உதவி கோட்ட பொறியாளர் ரெங்கராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியம், நமச்சிவாயம், தாசில்தார் பரஞ்சோதி, ஒன்றிய பொறியாளர்கள் வெங்கடேஷ் குமார், விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்