ரூ.2.47 கோடியில் வளர்ச்சி பணிகள்

கொல்லிமலையில் ரூ.2.47 கோடியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2023-10-09 18:45 GMT

வளர்ச்சி பணிகள்

கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம், திண்ணணூர்நாடு ஊராட்சியில் முதல்-அமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.48.96 லட்சம் மதிப்பீட்டில் மங்கலப்பட்டி பிரிவு முதல் மங்கலப்பட்டி வரை சாலை பலப்படுத்தும் பணி, வளப்பூர்நாடு ஊராட்சியில் ரூ.93.37 லட்சம் மதிப்பீட்டில் திண்ணணூர்நாடு சாலையை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதேபோல் ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.25.63 லட்சம் மதிப்பீட்டில் புதுக்கல் ஓடையில் பாலம் அமைக்கும் பணி, குண்டூர்நாடு ஊராட்சியில் முதல்-அமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.79.06 லட்சம் மதிப்பீட்டில் திண்டூர்பட்டி முதல் பல்லிக்காட்டுப்பட்டி வரை சாலை புதுப்பிக்கும் பணி என மொத்தம் ரூ.2.47 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.

கலெக்டர் ஆய்வு

இந்த வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், நடைபெற்று வரும் பணிகளை ஒப்பந்த காலத்திற்குள் விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.

தொடர்ந்து திண்ணணூர்நாடு ஊராட்சி, மங்கலப்பட்டி அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள், குழந்தைகளின் வருகை உள்ளிட்ட விவரங்களை விரிவாக கேட்டறிந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்