செஞ்சி ஒன்றியத்தில்ரூ.2½ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்

செஞ்சி ஒன்றியத்தில் ரூ.2½ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.

Update: 2023-07-02 18:45 GMT


செஞ்சி, 

செஞ்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், செஞ்சியை அடுத்த விநயம்பாடி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 லட்சத்து 93 ஆயிரம் ரூபாயில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம், 7 லட்சம் ரூபாயில் புத்தகரம் கிராமத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நிதியில் கட்டப்பட்ட நாடக மேடை திறப்பு விழா நடைபெற்றது.இதேபோன்று, ஆர்.நயம்பாடி கிராமத்தில் ரூ.93 லட்சம் மதிப்பில் ஆர்.நயம்பாடி - பெலாக்குப்பம் இடையேவும், சோ.குப்பம் - புத்தேரி இடையே ரூ.53 லட்சத்திலும், க.புலிப்ட்டு - சே.பேட்டை இடையே 56 லட்சம் ரூபாயில் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கும் வகையில் பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தந்த பகுதியில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீத்தாலட்சுமி, வெங்கடசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிகளில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். மேலும், தார் சாலை அமைகும் பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார்.

இதில், மாவட்ட கவுன்சிலர் அகிலா பார்த்திபன், ஒன்றிய செயலாளர்கள் பச்சையப்பன், விஜயராகவன், ஒன்றிய கவுன்சிலர்கள் சீனிவாசன், புவனா செந்தில்குமார், டிலைட், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயபாலன், சுகுணா, கீதா, சந்தானம், ஒன்றிய அவைத் தலைவர் வாசு, மாவட்ட பிரதிநிதி அய்யாதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்