வளர்ச்சி திட்ட பணிகள்

பட்டுக்கோட்டையில வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் பார்வையிட்டு ஆ்ய்வு செய்தார்.

Update: 2023-09-07 20:33 GMT

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டையில வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் பார்வையிட்டு ஆ்ய்வு செய்தார்.

பஸ் நிலைய கட்டுமான பணி

பட்டுக்கோட்டை நகராட்சி நரியம் பாளையத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலைய கட்டிட பணிகளை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

பின்னர் நகராட்சி என்.ஜி.ஜி.ஓ.காலனியில் ரூ.1 கோடியே 14 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் அறிவு சார் மையம் மற்றும் நூலகம் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார். பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் புற நோயாளிகள் பிரிவு, பொதுமக்கள் சிகிச்சை பிரிவு, மக்களைத் தேடி மருத்துவ பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, நோயாளிகளுடன் இருப்போர் தங்குமிடம் போன்ற பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

தொடர்ந்து காசாங்குளம் வடகரையில் நகராட்சி சார்பில் ரூ.2 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் தினசரி மார்க்கெட் கடைகள் கட்டுமான பணி உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு ெசய்தார். அப்போது பணிகளை விரைந்தும், தரமாகவும் முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

நாட்டுச் சாலை வடவனேரியில் பனை விதை நடும் பணிகளை கலெக்டர் தொடங்கி வைத்தார். இந்த ஆய்வின் போது பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் அக்பர் அலி, பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் குமரன், நகர் மன்ற தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார், நகராட்சி பொறியாளர் குமார், நகர் அமைப்பு அலுவலர் முருகானந்தம், பட்டுக்கோட்டை தாசில்தார் ராமச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்