வளர்ச்சி திட்ட பணிகள்

வளர்ச்சி திட்ட பணிகள்

Update: 2023-07-26 18:45 GMT

நாகை கடற்கரை கிராமங்களில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

நாகை கடற்கரை கிராமங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

முதல் கட்டமாக நாகை நம்பியார் நகரில் தன்னிறைவு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மீன்பிடி துறைமுகம் மேம்படுத்துவதற்கான பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நம்பியார் நகர் மீனவர்களின் கோரிக்கைகளையும் கேட்டு அறிந்தார்.

தடுப்புச்சுவர்

தொடர்ந்து வேளாங்கண்ணி வெள்ளையாறு முகத்துவாரத்தில் மண் அரிப்பை தடுக்க இரு கரைகளில் தடுப்புச்சுவர் அமைப்பது குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுகுறித்து உரிய திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, மீன்வளத்துறை இணை இயக்குனர் இளம்பழுதி, உதவி இயக்குனர் ஜெயராஜ், உதவி செயற்பொறியாளர் அன்னபூரணி உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்