செங்கோட்டை:
செங்கோட்டை மேலூர் தேவர் சமுதாயம் சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. சமுதாய தலைவர் முன்னாள் ராணுவ வீரா் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். பூலியப்பன், கிருஷ்ணன், முன்னாள் சமுதாய தலைவா் சண்முகராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனா். ஜோதிமணி வரவேற்றார். அதனைதொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட பசும்ெபான் முத்துராமலிங்க தேவர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. முன்னதாக முத்தழகி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு நகர பா.ஜனதா சார்பில் நடந்த விழாவில் மண்டல தலைவர் வேம்புராஜ், மண்டல பார்வையாளர் சீனிவாசன், இந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் முருகன், நகர துணைத்தலைவர் முருகன், செயலாளர் ராம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.