கடைகளில் காலாவதியான பொருட்கள் அழிப்புஉணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை

கடைகளில் காலாவதியான பொருட்களை அழித்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனா்.

Update: 2023-09-02 18:45 GMT

கடலூர் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கைலாஷ்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சந்திரசேகரன், சுப்பிரமணியன், நல்லதம்பி ஆகியோர் கடலூர் பஸ் நிலையம், மஞ்சக்குப்பம், லாரன்ஸ் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல்கள் மற்றும் கடைகளில் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். இதில் கடைகளில் இருந்த தயிர், மோர், இறைச்சி, சவர்மா உள்ளிட்ட பொருட்களை ஆய்வு செய்தனர். அப்போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தரம் இல்லாத 2 லிட்டர் தயிரும், தயாரிப்பு தேதி, பயன்பாட்டு தேதி இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட பொட்டலப் பொருட்கள் சுமார் 50 கிலோ மற்றும் காலாவதியான குளிர்பானங்கள் 5 லிட்டர் ஆகியவை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.20 ஆயிரம் ஆகும்.

மேலும் பஸ் நிலையத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த 5 கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்