300 லிட்டர் சாராயம் அழிப்பு

கல்வராயன்மலையில் 300 லிட்டர் சாராயத்தை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.

Update: 2023-07-15 18:45 GMT

கச்சிராயப்பாளையம், 

கல்வராயன்மலையில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி நேற்று விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.ஜியாவுல்ஹக் தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் மற்றும் போலீசார் கல்வராயன்மலை வனப்பகுதியில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது எருக்கம்பட்டு ஓடை அருகில் லாரி டியூப்பில் மறைத்து வைத்திருந்த சுமார் 300 லிட்டர் சாராயத்தை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் அதனை கீழே கொட்டி அழித்தனர். தொடர்ந்து சாராயத்தை பதுக்கி வைத்தவர்கள் யார் என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்