1000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
கல்வராயன்மலையில் 1000 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
கச்சிராயப்பாளையம்,
கல்வராயன்மலையில் உள்ள தாழ்வெண்ணியூர் வனப்பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் கரியாலூர் தனி பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் தலைமையிலான போலீசார் தாழ்வெண்ணியூர் வனப்பகுதியில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பேரல்களில் சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1000 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் அதனை கீழே கொட்டி அழித்தனர். இது குறித்த புகாரின் பேரில் கரியாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்தது யார் என்பது பற்றி விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.