1¼ லட்சம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2 மாதத்தில் 1¼ லட்சம் லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக போலீஸ் சூப்பிரண்டு பகவலன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2022-09-28 18:45 GMT

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாராயம் காய்ச்சுவதை முற்றிலுமாக ஒழிக்க சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி .கல்வராயன்மலை மற்றும் அதனை சுற்றியுள்ள மலை கிராமங்களில் சாராயம் காய்ச்சுவதற்காக பதப்படு்த்தி வைக்கபட்டிருந்த சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. சாராயம் காய்ச்சுபவா்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

மேலும் சாராயத்தின் தீமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 21-07-2022 முதல் 24-09-2022 வரை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றசெயலில் ஈடுபட்டது தொடர்பாக மொத்தம் 282 நபர்கள் மீது 306 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடமிருந்து 7,064 லிட்டர் சாராயம், 1 லட்சத்து 39 ஆயிரத்து 600 லிட்டர் சாராய ஊறல், 110 லிட்டர் கள், 180 மில்லி அளவுகொண்ட 811 மதுபாட்டில்கள் மற்றும் 30 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நடவடிக்கை

இது தவிர மதுவிலக்கு குற்ற செயலில் தொடர்ந்து ஈடுபட்ட 4 நபர்களை குண்டர் தடுப்புகாவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் யாரேனும் சாராயம் காய்ச்சினாலோ அல்லது விற்றாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்