அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சுரங்கவியல் துறை கருத்தரங்கு

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சுரங்கவியல் துறை கருத்தரங்கு நடைபெற்றது.

Update: 2023-10-18 18:45 GMT

அண்ணாமலைநகர், 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புல வளாகத்தில் சுரங்கவியல் பட்டயப்படிப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் முப்பரிமானத்தில் டிஜிட்டல் உருமாற்ற புரட்சி என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் நெய்வேலி என்.எல்.சி. நிலக்கரி சுரங்க நிறுவனத்தின் மனித வளத்துறை இயக்குனர் சமீர் சுவரூப் கலந்து கொண்டு சுரங்கங்கள் பற்றியும், சுரங்கவியல் துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும் கருத்துரை வழங்கி பேசினார். எந்திரவியல் துறை இணை பேராசிரியர் வினோத்குமார் கருத்தரங்கின் நோக்கம் குறித்து பேசினார். அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புல முன்னாள் மாணவரும், துறை சார்ந்த நிபுணருமான சென்னையை சேர்ந்த பிரதாப் கலந்துகொண்டு முப்பரிமாணத்தில் டிஜிட்டல் உருமாற்ற புரட்சி குறித்து மாணவர்களுக்கு பயிற்சியளித்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சுரங்கவியல் துறை இயக்குனர் பேராசிரியர் சி.ஜி.சரவணன், இணை பேராசிரியர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் மணிகண்டன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்