டெங்கு தடுப்பு கசாயம் வழங்கும் முகாம்

தேவர்குளம் அருகே உள்ள பள்ளிகளில் டெங்கு தடுப்பு கசாயம் வழங்கும் முகாம் நடந்தது.

Update: 2023-02-17 18:45 GMT

பனவடலிசத்திரம்:

நெல்லை மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி, தேவர்குளம் அருகே உள்ள வன்னிக்கோனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ பிரிவு சார்பில் டெங்கு தடுப்பு கசாயம் வழங்கும் முகாம் நடந்தது. மேலஇலந்தைகுளம் ஆர்.சி. தொடக்கப்பள்ளி, தெற்குஅச்சம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி, தேவர்குளம் சங்கரி மெட்ரிக் பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வடக்கு அச்சம்பட்டி, வன்னிகோனேந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வெங்கடாசலபுரம் அரசு தொடக்கப்பள்ளி, சொக்கநாச்சியார்புரம் இந்து தொடக்கப்பள்ளி, தடியாபுரம் டி.டி.டி.ஏ. தொடக்கப்பள்ளி, பெருமாள்பட்டி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஜெயபாண்டியன் தொடக்கப்பள்ளி, சாலைப்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மூவிருந்தாளி டி.டி.டி.ஏ. நடுநிலைப்பள்ளி, சுண்டங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மேசியாபுரம் காந்தி தொடக்கப்பள்ளி, வடக்கு புளியம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி, வெள்ளப்பனேரி அரசு உயர்நிலைப்பள்ளி, மேலநரிக்குடி ஜான் தொடக்கப்பள்ளி, மறுக்காலங்குளம் சுவாமி விவேகானந்தா தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் அரசு சித்த மருத்துவ டாக்டர் லவ்லீன் ரோஸி தலைமையில் மருத்துவ குழுவினர் அனைத்து மாணவர்களுக்கும் டெங்கு தடுப்பு கசாயம் வழங்கினர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்