டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் அளிக்க வேண்டும் - பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தல்

டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் அளிக்க வேண்டும் என்று அரசு, தனியார் ஆய்வகங்களுக்கு பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

Update: 2023-10-08 02:55 GMT

தஞ்சை,

தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் 30 பேர் வரையில் டெங்குவால் பாதிக்கப்படுகின்றனர். இதனால், அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் அளிக்க வேண்டும் என்று அனைத்து அரசு, தனியார் ஆய்வகங்களுக்கு பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் உள்ள 1,830 ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமப்புற சுகாதார நிலையங்களை ஒருங்கிணைத்து பரிசோதனை கருவிகளை அரசு வழங்கியுள்ளது.

23,000 மருத்துவ பணியாளர்கள் டெங்கு தடுப்பு சிறப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்