டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்

நீடாமங்கலம் ஒன்றியம் பூவனூர் ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடந்தது.

Update: 2023-10-01 18:45 GMT

நீடாமங்கலம்:

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பூவனூர் ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க, காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் மற்றும் தூய்மை பாரத இயக்கம் சார்பில் குப்பை இல்லா இந்தியாவை உருவாக்க தூய்மை பணிகளும் நடைபெற்றது. முகாம், தூய்மை பணியினை ஒன்றியக்குழுத்தலைவர் செந்தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், வட்டார மருத்துவ அலுவலர் ராணி முத்துலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் திருஒளி, மருத்துவ ஆய்வாளர் கலையரசன் ஆகியோர் கொண்ட குழுவினர் வீடுவீடாக சென்று டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் உள்ளனவா என்று பரிசோதனை செய்தனர். நடமாடும் மருத்துவ வாகனம் மூலமாகவும் பரிசோதனை செய்து மருத்துகள் வழங்கப்பட்டது. முகாமில் ஒன்றியக்குழு உறுப்பினர் பாரதிமோகன் மற்றும் உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் உள்பட பலரும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் மோகன், ஊராட்சி செயலாளர் பத்மா ஆகியோர் செய்திருந்தனர். நீடாமங்கலம் பொதுப்பணித்துறை சார்பில் வெண்ணாற்றுப்பாலக்கரை பகுதியில் தூய்மை பணிகள் நடைபெற்றது.பொக்லின் எந்திரம் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டது. இதில் உதவிசெயற்பொறியாளர் கனகரத்தினம் தலைமையில் உதவிப்பொறியாளர்கள், நீர்வளத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்