டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி

டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது

Update: 2023-10-10 18:45 GMT

தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி நேற்று தளக்காவயல் ஊராட்சியில் யூனியன் தலைவர் பிர்லா கணேசன் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக கொசு மருந்து அடிக்கும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.

மேலும் ஒவ்வொரு கிராமத்திலும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வையும் தொடங்கி வைத்தார். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்