டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சுரண்டையில் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Update: 2023-02-05 18:45 GMT

சுரண்டை:

சுரண்டை பகுதியில் டெங்கு பரவாமல் தடுக்கவும், டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் வி.கே.எஸ்.சக்திவேல் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுரண்டை நகராட்சி தலைவர் ப.வள்ளிமுருகன், ஆணையாளர் முகமதுசம்சுதீன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமார் சுரண்டை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் டெங்கு காய்ச்சல் உள்ள பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனவும், கொசு ஒழிப்பிற்கு புகை மருந்து அடிக்க வரும் நகராட்சி பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து சுரண்டை நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் நகராட்சி பணியாளர்கள் மழைநீர் சேகரிப்பு தொட்டி, குடிநீர் தொட்டி ஆகியவற்றை ஆய்வு செய்து கொசு ஒழிப்பு மருந்து அடித்து டெங்கு தடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்