டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி
திருப்பரங்குன்றத்தை அடுத்த பசுமலையில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றத்தை அடுத்த பசுமலையில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் தாமஸ் பிரின்ஸ் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் கலந்துகொண்டு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மேலும் அவர் பொதுமக்களிடையே டெங்கு காய்ச்சல் ஒழிப்பு தொடர்பான துண்டு பிரசுரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் கவுன்சிலர் ரவிச்சந்திரன், நாட்டு நலப்பணித்திட்ட ஆசிரியர் சாம் ஹரிஷ் உள்பட ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.