ஆனைமலையில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு
ஆனைமலையில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு
ஆனைமலை
ஆனைமலை வி.ஆர்.டி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நூலக வார விழாவை முன்னிட்டு சுகாதாரத்துறை சார்பில் மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. மேலும் சுகாதார துறையினர் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் நந்தினி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜசேகர், சித்த மருத்துவர் ஸ்ரீதேவி சுகாதார ஆய்வாளர் செல்லதுரை, நூலகர் மீனா குமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.