முற்போக்கு பெண்கள் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

பாபநாசத்தில் முற்போக்கு பெண்கள் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது

Update: 2022-06-27 20:32 GMT

பாபநாசம் ஒன்றிய அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் சார்பில் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு, மாவட்ட செயலாளர் கண்ணையன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் செல்லதுரை முன்னிலை வகித்தார். பெட்ரோல்-டீசல், கியாஸ் விலையை உடனடியாக குறைக்க வேண்டும். கிராமப்புற-நகர்ப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தில் புகைப்படம் எடுக்கும் முறையை கைவிட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்கள், தலித்துகள் சுதந்திரமாக செயல்படுவதை உறுதி செய்திட வேண்டும் என்பன உள்பட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் ஒன்றிய செயலாளர் விஜயாள், பாபநாசம் ஒன்றிய தலைவர் மாலதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.





Tags:    

மேலும் செய்திகள்