நீட் தேர்வை ரத்து செய்ய கோரி திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக மாணவரணி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது

Update: 2024-07-03 06:39 GMT

சென்னை,

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சட்டசபையில் கடந்த 28ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில்,திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ,மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது ,

நீட் தேர்வுக்கு எதிராக ஒரு காலத்தில் திமுக மட்டுமே பேசிக் கொண்டிருந்தது. இன்று அனைத்துக் கட்சிகளும், ஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்க்க ஆரம்பித்துள்ளது. நிச்சயமாக மாற்றம் வரும்.என தெரிவித்தார்.  

Tags:    

மேலும் செய்திகள்