டிரோன் மூலம் மருந்து தெளிப்பது குறித்த செயல்விளக்கம்

டிரோன் மூலம் மருந்து தெளிப்பது குறித்த செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

Update: 2023-03-12 19:29 GMT

வத்திராயிருப்பு, 

விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்மை துறை சார்பில் பருத்தி பயிர்களுக்கு டிரோன் மூலம் மருந்து தெளிப்பதற்காக நீடித்த நிலையான பருத்தி சாகுபடி திட்டத்தில் 100 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களில் 400-க்கும் மேற்பட்ட ஏக்கருக்கு 100 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

இதில் வத்திராயிருப்பு ஒன்றியத்தில் 800 ஏக்கருக்கு மேல் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு நீடித்த நிலையான பருத்தி சாகுபடி திட்டத்தில் டிரோன் மூலம் மருந்து தெளிப்பதற்கு வத்திராயிருப்பு ஒன்றியத்தில் 45 ஏக்கருக்கு 100 சதவீதம் மானியம் அளிக்கப்படுகிறது. இதுகுறித்து முன்னோடி விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் வேளாண்மை துணை இயக்குனர் முத்துலெட்சுமி, வேளாண் அலுவலர்கள் சுரேஷ், கஸ்தூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்