பாலை கீழே கொட்டி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சங்ககிரியில் பால் விலையை உயர்த்தக்கோரி பாலை கீழே கொட்டி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-10-20 20:01 GMT

சங்ககிரி:-

சங்ககிரி தாசில்தார் அலுவலகம் முன்பு பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தினர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் கறவை மாட்டுடன் வந்து பாலை கீழே கொட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க சேலம் மாவட்ட தலைவர் மணி தலைமை தாங்கினார். இதில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும், ஒரு லிட்டர் பசும்பால் ரூ.42-க்கும், எருமை மாட்டு பால் ரூ.51-க்கும் வழங்க வேண்டும். பால் கூட்டுறவு சங்க பணியாளர்களை பணிவரன் முறை படுத்த வேண்டும். அரசு காப்பீட்டு திட்டத்தில் அனைத்து கால்நடைகளுக்கும் இலவச காப்பீடு வழங்க வேண்டும். 50 சதவீதம் மானியத்தில் கால்நடை தீவனங்கள் வழங்க வேண்டும். முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பால் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க நிறுவன தலைவர் சின்னண்ணன், மாநில துணைத்தலைவர் சங்கர், தமிழ்நாடு விவசாய சங்க சேலம் மாவட்ட துணைத்தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்