மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம்

காவிரியில் போதிய அளவு தண்ணீர் திறக்கக்கோரி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த காவிரி படுகை பாதுகாப்பு கூட்டு இயக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

Update: 2023-10-09 20:15 GMT

கும்பகோணம்,

காவிரியில் போதிய அளவு தண்ணீர் திறக்கக்கோரி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த காவிரி படுகை பாதுகாப்பு கூட்டு இயக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

காவிரி படுகை பாதுகாப்பு இயக்க கூட்டம்

கும்பகோணம் சகாஜி தெருவில் உள்ள தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டு இயக்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழகத்துக்கு உரிய அளவு தண்ணீரை திறந்து விட வலியுறுத்தியும், உச்சநீதிமன்ற அறிவுறுத்தலுக்கு பின் திறக்கப்படும் குறைந்த நீரை கூட தடுப்பதை கண்டித்தும், தமிழக அரசு பலமுறை மத்திய அரசிடம் வலியுறுத்தியும் தமிழக விவசாயிகளை பற்றி கவலைப்படாத மத்திய பா.ஜனதா அரசை கண்டித்தும் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கம் சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்களிலும், தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் முழுவதும் நாளை (புதன்கிழமை) கடை அடைப்பு செய்து, காலை 9 மணிக்கு மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் லோகநாதன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவளவன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஸ்டாலின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்