பெட்ரோல்-டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பாபநாசத்தில் பெட்ரோல்-டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது

Update: 2022-05-30 19:07 GMT

பாபநாசம்:

பாபநாசம் அண்ணா சிலை அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி (எம்.எல். லிபரேஷன்) சார்பில் பெட்ரோல்-டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வு, கடும் விலைவாசி உயர்வு, வேலையின்மை, மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பாபநாசம் நகர செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் செந்தமிழ்செல்வன், பாபநாசம் ஒன்றிய செயலாளர் செல்லதுரை, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் விஜயா உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.


Tags:    

மேலும் செய்திகள்