போதை பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் போதை பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-07-30 13:42 GMT

தமிழகம் முழுவதும் போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி திருவண்ணாமலை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்ட பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

தெற்கு மாவட்ட செயலாளர் ஏந்தல் பெ.பக்தவச்சலம் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் ஆ.வேலாயுதம் முன்னிலை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் இல.பாண்டியன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ.வும், கிழக்கு மாவட்ட செயலாளருமான கணேஷ்குமார் கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டில் குட்கா, கஞ்சா, ஹான்ஸ், பான்மசாலா உள்ளிட்ட போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் இரா.காளிதாஸ், அ.வே.பிரசாத், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் நாராயணசாமி, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் இரா.ஜானகிராமன், பழமண்டி செந்தில்குமார், சி.எம்.பழனி,

மாவட்ட பொருளாளர் வீரம்மாள், மகளிரணி மாநில நிர்வாகி கஸ்தூரி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருவண்ணாமலை நகர செயலாளர் பத்மநாபநாயுடு நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்