விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலை திட்டத்தை பேரூராட்சி, நகராட்சிகளுக்கு விரிவுபடுத்தக்கோரி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-10 18:45 GMT

திட்டச்சேரி:

திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், ஒன்றிய தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பாபுஜி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன் ஆகியோர் முன்னிலை வகித்து கோரிக்கைகளை விளக்கி பேசினர். விவசாய தொழிலாளர்களை பாதுகாத்திட அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் வேலையை உடனே தொடங்க வேண்டும், 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி நாள் ஒன்றுக்கு ரூ.600 சம்பளம் வழங்க வேண்டும். பேரூராட்சி, நகராட்சி பகுதிகளுக்கும் 100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். அனைத்து விவசாய தொழிலாளர்களுக்கும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். நீர்நிலை புறம்போக்கு, கோவில் மனையில் குடியிருப்பவருக்கு வீட்டுமனை ப்பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் கட்சியின் ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்