வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டத்தில் மணல் கொள்ளையினை தடுத்த போது துறையூர் வருவாய் ஆய்வாளர் பிரபாகா் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலக வளாகம், தாசில்தார் அலுவலக வளாகம் உள்பட மாவட்டத்தில் 13 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதேேபால் ஆலங்குடி தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் வட்ட தலைவர் சாலை மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்து பேசினார். இதில் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர். முடிவில் ஆலங்குடி தனி தாசில்தார் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.