அரசு கள்ளர் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
நிலக்கோட்டை அருகே அரசு கள்ளர் பள்ளியை முற்றுகையிட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள ராமராஜபுரம் ஊராட்சியில் அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி உள்ளது. நேற்று அப்பகுதி கிராம மக்கள் திரண்டு வந்து பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கள்ளர் பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க வேண்டாம் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதேபோல் நிலக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பும் நிலக்கோட்டை, எம்.குரும்பபட்டி, முத்துக்காமன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் அதே கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் தேன்ெமாழி எம்.எல்.ஏ.விடம் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தரும்படி கோரிக்கை மனு கொடுத்தனர். சிலுக்குவார்பட்டி பஸ்நிலையம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.