வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

Update: 2023-01-20 18:45 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் மாவட்ட வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் அங்குள்ள இந்தியன் வங்கி முன்பு நடைபெற்றது. இதற்கு மாவட்ட பொதுச் செயலாளர் கல்யாண சுந்தரம் தலைமை தாங்கினார். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்துசெய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், வங்கியில் காலியாக உள்ள 2 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதியம் சம்பந்தமான பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து வங்கி அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாகி ராம்ஜி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்