இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோத்தகிரியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோத்தகிரி
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய பா.ஜனதாவினரை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் முற்போக்கு மக்கள் மேடை சார்பில் கோத்தகிரி மார்க்கெட் திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஜனநாயக வாலிபர் சங்க தாலுகா தலைவர் சுந்தர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் போதைப்பொருட்கள் விற்பனை செய்த பா.ஜனதா நிர்வாகியை தட்டிக் கேட்ட திருச்சி மாவட்ட சங்க நிர்வாகி மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், அந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகி சோழா மகேஷ், தாலூகா செயலாளர் மணிகண்டன், ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.