கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மதுரை, செப்.27-
தமிழக கூட்டுறவு சங்க ஊழியர் மதுரை மாவட்ட சங்கம் சி.ஐ.டி.யூ. சார்பில் நேற்று பழங்காநத்தம் பகுதியில் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு பண்டிகை முன் பணம், போனஸ், ஒப்படைப்பு விடுப்பு சம்பளம், ஓய்வூதியம் வழங்க வேண்டும், பொதுவினியோக திட்டத்தை தனித்துறையாக உருவாக்கி பணிவரன்முறைப்படுத்தாத ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய 3 சதவீதம் அகவிலைப்படி நிலுவையினையும், சரண்விடுப்பு ஊதியமும் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர் ஆர்பாட்டத்திற்கு சம்மேளன உறுப்பினர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் முனியாண்டி தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட தலைவர் துரைச்சாமி பேசினார். மாநில செயல் தலைவர் லெனின் நிறைவுரையாற்றினார்.