தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
கோவில்பட்டி:
கோவில்பட்டி புதுரோடு பழைய நகரசபை அலுவலகம் முன்பு மக்கள் உரிமை இயக்கம், நகரசபை தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் சுடலைமணி தலைமை தாங்கினார். கோரிக்கைகளை வலியுறுத்தி சங்க செயலாளர் குரு சேகர் மற்றும் நிர்வாகிகள் பேசினார்கள். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் கோவில்பட்டி நகராட்சி பணியாளர்கள் சிக்கன நாணய சங்க செயலாளர் கார்த்திகாவிடம் மனு கொடுத்தார்கள்.
அதில், "கோவில்பட்டி நகரசபை தூய்மை பணியாளர்களுக்கு கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் மூலம் கடன் வழங்கப்படுகிறது. கடன் தொகையை நகராட்சி நிர்வாகம் மாதம்தோறும் சம்பளத்தில் பிடித்தம் செய்து கட்டி வருகிறது. கடன் பெறும்போது முன்பணமாக பிடித்தம் செய்த பணத்திற்கு வட்டி வழங்கப்படுவதில்லை. கடன் முடிந்த பின்பு மீண்டும் கடன் வழங்கவும், பிடித்தம் செய்யப்படும் பணத்திற்கு உடனடியாக வட்டி பணம் கொடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.