மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-01-31 19:11 GMT

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கோவை ரோட்டில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவானந்தம், மாநில தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மின்வாரிய ஊழியர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

கேங்மேன் ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களான இடுப்பு கயிறு, கையுறை, டார்ச் லைட், எர்த் ராடு ஆகியவற்றை வழங்க வேண்டும். 5,600 கேங்மேன் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊழியர்களுக்கு ஊர் மாற்றம் உத்தரவு வழங்க வேண்டும். பகுதி நேர ஊழியர்களுக்கு பணி ஆணை வழங்காத நிர்வாகத்தை கண்டிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்