சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டம்
வேடசந்தூர் அருகே அருந்ததியினர் மற்றும் ஆதிதிராவிடர் இயக்கத்தின் சார்பில் சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
அருந்ததியினர் மற்றும் ஆதிதிராவிடர் இயக்கத்தின் சார்பில் கூம்பூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதற்கு குஜிலியம்பாறை ஒன்றிய முன்னாள் தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் காளியப்பன், நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, சுப்பிரமணி, பிரேம்நகர் சுந்தரராஜன், வீராசாமி, முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் அருந்ததியினர் சமூகத்தினரை இழிவாக பேசிய, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் ஆனந்தராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.