வருவாய் துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில் வருவாய் துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிணத்துக்கடவு
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே கோவில்பத்து கிராமத்தில் வி.ஏ.ஓ.வாக பணியாற்றிய லூர்து பிரான்சிஸ், நேற்று பணியில் இருந்தபோது மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம், தமிழ்நாடு நிலஅளவை சங்கம், தமிழ்நாடு நேரடி நியமன அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மேற்கண்ட சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு, கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதில் கிணத்துக்கடவு தாசில்தார் அலுவலக தலைமை இடத்து வட்டாட்சியர் செல்லத்துரை, மண்டல துணை தாசில்தார் முத்து, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கதலைவர் வாசுதேவு, தமிழ்நாடு நிலஅளவை சங்கம் தமிழ்செல்வன், தமிழ்நாடு நேரடி நியமன அலுவலர்கள் சங்கம் செல்லதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் மறைவிற்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.