மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திட்டுவிளையில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Update: 2023-07-24 18:45 GMT

அழகியபாண்டியபுரம், 

மணிப்பூரில் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவத்தை கண்டித்தும், பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்களை தடுத்து நிறுத்த கோரியும் திட்டுவிளை நகர விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் திட்டுவிளை பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. குமரி மாவட்ட செயலாளர் மாஜிதாஷா தலைமை தாங்கினார். உறுப்பினர் நபிலா அமீர் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பூதப்பாணடி பேரூராட்சி கவுன்சிலர் நபீலா ஆலிமா, பச்சை தமிழகம் கட்சி நிறுவனர் சுப.உதயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் அனிஸா இப்ராஹிம் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

------------

Tags:    

மேலும் செய்திகள்