சிவகங்கையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கள்ளச்சாராய சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை கோரி சிவகங்கையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Update: 2023-05-29 18:45 GMT

சிவகங்கை

கள்ளச்சாராய சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை கோரி சிவகங்கையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் இறப்பிற்கு காரணமாக இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு காரணமான தி.மு.க. அரசை கண்டித்தும் சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.. சிவகங்கை நகர் செயலாளர் என்.எம்.ராஜா வரவேற்று பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் மற்றும் நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், சேவியர் தாஸ், செல்வமணி, கோபி, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் பில்லூர் ராமசாமி, மாரிமுத்து, கோமதி தேவராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் ராமு.இளங்கோவன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைத்தலைவர் வக்கீல் ராஜா, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் ஆர்.எம்.எல்.மாரி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜாக்குலின். முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் சிவதேவ் குமார், கூட்டுறவு ஒன்றிய தலைவர் புவனேந்திரன், பாசறை பொருளாளர் சரவணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் புதுப்பட்டி சிவா மற்றும் கட்சி தொண்டா்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்