பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

முதுகுளத்தூர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-08 18:45 GMT

முதுகுளத்தூர், 

முதுகுளத்தூர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொதுக்குழு உறுப்பினர் முத்து தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அந்தோணி ராஜ் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் முதுகுளத்தூர், சாயல்குடி, கடலாடி, கமுதி, பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு 9 மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்தும், 3 வருடங்களாக இ.பி.எப். மற்றும் இ.எஸ்.ஐ. கட்டாத ஒப்பந்ததாரரை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், முதுகுளத்தூர், கமுதி, சாயல்குடி, கடலாடி ஆகிய பகுதியிலிருந்து ஒப்பந்த ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்