துப்புரவு பணியாளர்கள் தர்ணா

துப்புரவு பணியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-04 19:30 GMT

நாகை நகராட்சிக்கு உட்பட்ட நாகூரில் கடந்த மாதம் கழிவுநீர் வடிகாலை சரிவர தூய்மை செய்யவில்லை என கூறி துப்புரவு பணியாளர் ஒருவரை தாக்கி, அவமரியாதை செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி துப்புரவு பணியாளர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகூர் புதிய பஸ் நிலையத்தில் இந்த போராட்டம் நடந்தது. இதையொட்டி தூய்மை பணியாளர்கள் பணிகளையும் புறக்கணித்தனர். பின்னர் நகராட்சி அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து துப்புரவு பணியாளர்கள் பணிக்கு திரும்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்