ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-04-18 18:45 GMT

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. குழந்தைகளின் வருகையை கணக்கிட்டு பிரதான மையங்களை குறு மையங்களாகவும், குறு மையங்களை பிரதான மையங்களோடு இணைக்கும் முடிவை கைவிட வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு மே மாதம் விடுமுறை விட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் சாந்தியம்மாள் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்